தற்போதைய செய்திகள்

கனிமொழி தேர்தலில் போட்டியிடுவது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல் – ஐ.எஸ்.இன்பதுரை எம்.எல்.ஏ பரபரப்பு பேட்டி

சென்னை:-

கழக தேர்தல் பிரிவு துணைச்செயலாளர், ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.எஸ்.இன்பதுரை நெல்லையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடியில் கனிமொழி பணம் பட்டுவாடா செய்த வீடியோ பற்றி அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி அளிக்கையில், அந்த வீடியோவில் இருப்பது நாங்கள் இல்லை என்று கூறவில்லை. பணம் கொடுக்கவில்லை என்றும் கூறவில்லை. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு முன் நடந்த சம்பவம் என்றாலும் கூட கையூட்டு கையூட்டு தான். எனவே கனிமொழி தேர்தலில் போட்டியிடுவது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல். அவர் போட்டியிடுவதை நிறுத்த வேண்டும். அங்கு தி.மு.க. சின்னத்தை முடக்க வேண்டும்.

கனிமொழி மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பறக்கும்படை அதிகாரி புகார் கொடுத்த பின்னர் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உயர்நீதிமன்றத்தை சரிகட்டி தீர்ப்பு பெறப்பட்டுள்ளது என்று தேனி பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். நீதிமன்றத்தை அவமதித்து பேசிய ஸ்டாலின் மீது வழக்கு தொடர இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கனிமொழி மீது புகார் கொடுத்த வழக்கில் உங்களை இணைத்துக் கொள்வீர்களா? என்ற கேள்விக்கு தேவையெனில் இணைத்துக் கொள்வேன் என்றார்.