சேலம்

கருமந்துறையில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் – மாநில கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன் பங்கேற்பு

சேலம்

சேலம் புறநகர் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் கருமந்துறையில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய கழக செயலாளர் ரமேஷ் வரவேற்று பேசினார். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான ஆர்.இளங்கோவன் பங்கேற்று ஆலோசனை வழங்கினார். அவர் பேசியதாவது:-

எந்த நேரத்திலும் உள்ளாட்சித் தேர்தல் வரலாம். கழக நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட்டு உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றி அடைய அயராது பாடுபட வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதனை மறந்து கழகமும் கட்சியும் முக்கியம் என கருதி அனைவரும் செயல்பட வேண்டும். தமிழக மக்கள் நலனுக்காக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அயராது பாடுபட்டு வருகிறார்.

மக்கள் தேவைகள் என்ன என்பதை அறிந்து அதனை பூர்த்தி செய்வதற்கு அரும்பாடுபட்டு வருகிறார். விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டுள்ள அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு என்னென்ன தேவை எந்த நேரத்தில் என்ன என்பதனை அறிந்த விவசாயிகளின் பாதுகாவலனாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திகழ்ந்து வருகிறார். தங்கள் பகுதியில் உள்ள பொது மக்களின் குறைகளை கேட்டறிந்து அவைகளை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு அனைவரும் முயற்சி எடுத்து திறம்பட செயல்பட வேண்டும்.

இவ்வாறு ஆர்.இளங்கோவன் பேசினார்.

இக்கூட்டத்தில் சின்ன கல்ராயன்மலை கூட்டுறவு சங்க தலைவர் தனலட்சுமி மோகன், ஊராட்சி செயலாளர் மூர்த்தி உள்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.