திருவண்ணாமலை

கள்ளித்தாங்கல் கோயில் கும்பாபிஷேக விழா – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பங்கேற்பு…

திருவண்ணாமலை:-

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கள்ளித்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த செல்வமாரியம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் ஆலயத்தினுள் அருள்மிகு பொன்னியம்மன் ஸ்ரீராமர் பஜனை கோயில் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக யாகசாலை பூஜை சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீகாஞ்சி சேத்திர கலாமந்திர் நடன நிகழ்ச்சியும், இரவு அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது. ராஜஸ்தான் மேளம், வானவேடிக்கைகள் நடைபெற்றது.விழாவில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழா குழுவினர் அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதில், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்தா சுவாமிகள், ஆரணி ஜோதிடர் ரா.குமரேசன், அரசு வழக்கறிஞர் க.சங்கர், வேலூர் பால் கூட்டறவு சங்க துணைத்தலைவர் பாரி பி.பாபு, ஒன்றிய செயலாளர்கள் பிஆர்ஜி.சேகர், எம்.வேலு, பாசறை மாவட்ட செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், தொழிலதிபர்கள் கே.ராஜேந்திரன், பி.என்.எம்.என்.ரமேஷ்பாபு, அப்பாண்டைராஜ், வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் பி.நடராஜன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.