நாகப்பட்டினம்

கழகத்தின் தலைமையிலான மெகா கூட்டணி சரித்திரம் படைக்கும் – பிரேமலதா விஜயகாந்த் முழக்கம்…

நாகப்பட்டினம்:-

கழகத்தின் தலைமையிலான மெகா கூட்டணி சரித்திரம் படைக்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் எஸ்.ஆசை மணியை ஆதரித்து சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நமது வேட்பாளர் வெற்றி பெற்று வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி இந்த தொகுதியை மேம்படுத்த போகிறார். ெகாள்ளிடம் ஆற்றில் கடல் நீர் உட்புகாமல் தடுக்க தடுப்பு அணை கட்டப்படும் என்பதை முதல் வாக்குறுதியாக சொல்கிறோம். அதைபோல வெள்ள பள்ளம் உப்பாற்றில் கடல் நீர் உட்புகாமல் தடுக்க தடுப்பு அணை கட்டப்படும். சீர்காழி பனங்காட்டுகுடி சாலையிலே உயர்மட்ட ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என்ற ஒரு முக்கியமான வாக்குறுதியை தெரிவித்து கொள்கிறோம். வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் புறவழிச் சாலை அமைத்து தரப்படும்.

அது மட்டுமல்ல கொள்ளிடத்திலே தீயணைப்பு நிலையம் வேண்டும் என்று மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. அதுவும் நம் வேட்பாளர் வெற்றி பெற்று வந்த பிறகு நிறைவேற்றி தருவார். தீயணைப்பு நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம்.

இந்த கூட்டணி சாதாரண கூட்டணி அல்ல, மக்கள் போற்றும் கூட்டணி, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஆதரவை பெற்ற கூட்டணி. புரட்சித்தலைவி அம்மா அவர்களும், புரட்சிக் கலைஞர் கேப்டனும் ஒன்று சேர்ந்திடும் இது ராசியான கூட்டணி என்பதை 2011-ல் நிரூபித்தது. 2011 வரலாறு இப்போது மீண்டும் திரும்பி இருக்கிறது. உறுதியாக உங்கள் கோரிக்கையான மயிலாடுதுறை தலைமை இடமாக கொண்டு நிச்சயமாக ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்படும். அது மட்டுமல்ல இந்த கூட்டணி அமையக்கூடாது என்பதற்காக தி.மு.க.வை சேர்ந்தவர்கள் எத்தனையோ சூழ்ச்சிகளை செய்தார்கள். அத்தனை சூழ்ச்சியையும் முறியடித்த முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், இந்த மெகா கூட்டணியாக உருவாக்கி இருக்கிறார்கள். இந்த கூட்டணி நிச்சயம் சரித்திரம் படைக்கும்.

துரைமுருகன் வீட்டில் நடந்த ரெய்டு பற்றி தெரியும். கோடிக்கணக்கான பணத்தை பதுக்கி வைத்திருக்கிறார்கள். அது ஊழல் கூட்டணி. இது உழைப்பவர்களின் கூட்டணி. இது மக்களின் கூட்டணி. இந்த கூட்டணி ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஆதரவை பெற்ற கூட்டணியை. தி.மு.க கூட்டணி நிச்சயமாக மக்கள் புறக்கணிப்பார்கள். எங்கள் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் மோடி என்று நாங்கள் சொல்கிறோம். எதிர்க்கட்சியினர் பிரதமர் யார் என்று சொல்வார்களா? இதுவரை பாரத பிரதமர் யார் என்று சொல்ல முடியாத ஒரு திராணி இல்லாத எதிர்க்கட்சி இருக்கிறது.

கேரளாவில் காங்கிரசும், கம்னியூனிஸ்டும் ஒருத்தருக்கு ஒருவர் எலியும் பூனையாக அடித்து கொள்கிறார்கள், ஆனால் தமிழ்நாட்டுக்குள் வந்தால் மட்டும் நகமும். சதையுமாக ஒற்றுமையாக இருக்கிறார்கள். அப்படி என்றால் கொள்கை இல்லாத தி.மு.க.வும் காங்கிரசும். இந்த கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.