வேலூர்

கழகத்தின் தொடர் வெற்றிக்கு அம்மாவின் பேரன்பு கலந்த பேருழைப்பு தான் காரணம் -ஆம்பூர் பட்டிமன்றத்தில் வைகைச்செல்வன் தீர்ப்பு…

வேலூர்:-

கழக அரசின் சாதனைகளை விளக்கியும், தி.மு.க.வின் பொய்ப்பிரச்சாரங்களை முறியடித்தும், கழகம் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு காரணம், அம்மாவின் பேருழைப்பா? அம்மாவின் பேரன்பா? என்ற தலைப்பில், வேலூர் மேற்கு மாவட்டம், ஆம்பூர் தொகுதியில் மாபெரும் பட்டிமன்றம் நடைபெற்றது.

மாதனூர் ஒன்றிய கழக செயலாளர் ஜோதிராமலிங்கராஜா தலைமை வகித்தார். வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் சிறப்புரையாற்றினார். இதில், “அம்மாவின் பேருழைப்பே!” என்ற தலைப்பில் பாரீஸ்ராஜா, சிட்கோசீனு ஆகியோரும், “அம்மாவின் பேரன்பே!” என்ற தலைப்பில் ஏ.எஸ்.மகேஸ்வரி, குமரிபிரபாகரன் ஆகியோரும் பேசினர்.

இப்பட்டிமன்றத்தில், முன்னாள் அமைச்சரும், கழக செய்தி தொடர்பாளரும், நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக்குழு பொறுப்பாளருமான டாக்டர் வைகைச்செல்வன் நடுவராகப் பங்கேற்று, பட்டிமன்றத்தை துவக்கி வைத்து பேசியதாவது:-

தமிழகத்தில் முன்னேற்றம் என்பது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வருகைக்கு பின்னர்தான் பிள்ளையார் சுழி போடப்பட்டது. எத்தனையோ முதலமைச்சர்கள் தமிழகத்தை ஆண்டார்கள். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித்தலைவி அம்மாவும் முதலமைச்சர்களாக தமிழ்நாட்டை ஆண்ட காலங்கள் மட்டுமே தமிழ்நாட்டின் பொற்காலங்கள் என்று சொல்ல வேண்டும்.

மக்கள் மீது தலைவர்களும், தலைவர்கள் மீது மக்களும் செலுத்தக்கூடிய அன்பும், நேசமும், ஆதரவும் தான் ஜனநாயகம் சிறந்தோங்க வழி வகுக்கும். அதற்கு பெயர்தான் மக்களாட்சி என்பதாகும். அந்த பாக்கியத்தை பெற்ற இரண்டு முதலமைச்சர்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித்தலைவி அம்மாவும் மட்டுமே ஆவார்கள். இந்த இரண்டு தலைவர்களும் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி வைத்தவர்கள்.

தமிழக மக்களுக்காக தன் உடலை வருத்தி உருகும் மெழுகுவர்த்தியாக தன்னையே வருத்தி கொண்டு தமிழக மக்களின் தாயாக இருந்து தன் வாழ்வை அர்ப்பணித்து மக்களை தேடி அரசு செயல்படும் வகையில் புரட்சியை ஏற்படுத்தியவர் புரட்சித்தலைவி அம்மா. அவரது மனஉறுதி மிக்க செயல்பாடுகளால் புதிய சரித்திரம் படைத்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

“ஒரு நல்ல லட்சியத்துடன் முறையான வழியை கடைப்பிடித்து,தைரியத்துடன் வீரனாக விளங்குங்கள். மனிதராக பிறந்ததற்கு வாழ்ந்து சென்ற பின்னும் ஏதாவது அடையாளத்தை விட்டு செல்லுங்கள் என்ற பொன்மொழிக்கேற்ப, 32 ஆண்டுகளுக்கு பிறகு 2-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற புரட்சித்தலைவி அம்மா அவர்கள், தமிழக மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு மதிநுட்பத்துடனும், தொலைநோக்கு சிந்தனையுடனும் திட்டங்களை கொண்டு வந்து தமிழக மக்களின் மனங்களில் ஒரு வீரப்பெண்மணியாக திகழ்ந்தார்.

“இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” – என்ற பாடல் வரிகளுக்கு பொருத்தமாக வாழ்ந்து காட்டியவர்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும். தமிழக மக்களின் நலன்களுக்காக கண் துஞ்சாது பாடுபட்ட, புரட்சித்தலைவி அம்மா எனும் மிகப்பெரிய ஆளுமை படைத்த தலைவி நம்மை விட்டு மறைந்தாலும், அவர் விட்டு சென்ற அடையாளமான மக்களின் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்கின்றன.

நூறாண்டுகள் ஆனாலும் கழகம் மக்களுக்காக என்றென்றும் உழைக்கும், அம்மாவின் கொள்கைகளை முழுமையாக கட்டிக்காத்து அம்மாவின் கனவுகளை நனவாக்கி மக்கள் நலனுக்காக கழக அரசு தொடர்ந்து பாடுபடும்.
பட்டிமன்ற முடிவில் அம்மாவின் பேருழைப்பும், பேரன்பும்தான் கழகம் தொடர்ந்து வெற்றி பெறுவதற்குக் காரணம், என தீர்ப்பளித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஆம்பூர் நகர கழக செயலாளர்கள், ஊராட்சி மற்றும் கிளைக் கழக செயலாளர்கள், கழகப் பொறுப்பாளர்கள், தொடங்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஜி.விஜயன் நன்றி கூறினார்.