தற்போதைய செய்திகள்

கழகத்தின் வெற்றியை தடுக்க முடியாது – அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி…

சென்னை:-

இரண்டு ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்தாலும் அ.இ.அ.தி.மு.க கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவிததுள்ளார்.

இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வேலூரில் துரைமுருகன் வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் சிக்கியுள்ளது. தமிழகத்தில் தி.மு.க.வினர் வடசென்னை, தென்சென்னை என்று இரண்டு தொகுதிகளில் தலா ரூ.100 கோடி செலவழிக்க திட்டமிட்டுள்ளனர். தென்சென்னையில் மட்டும் ரூ.200 கோடி செலவிட முடிவெடுத்துள்ளனர். தமிழகத்தில் மொத்தம் ரூ1000 கோடி வரை செலவழிக்க வைத்துள்ளனர்.

தமிழகத்தில் தி.மு.க முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதால் தேர்தலுக்காக செலவழிக்க வைத்துள்ள ரூ.10 ஆயிரம் கோடி பிடிபடும். எத்தனை ஆயிரம் கொடுத்தாலும் அ.இ.அ.தி.மு.க கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது. எங்களுக்கு பணத்தின் மீது நம்பிக்கை இல்லை. கொள்கைகளின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் நாங்கள், தமிழகத்தில் மறைந்த முதல்வர் அம்மாவின் அலை வீசுகிறது.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.