தற்போதைய செய்திகள்

கழகத்திற்கு துரோகம் செய்தவர்கள் அரசியலில் சாதிக்க முடியாது – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு…

தூத்துக்குடி:-

அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்கள் யாரும் அரசியலில் சாதிக்க முடியாது புதூர் ஒன்றியத்தில் நடந்த பிரச்சாரத்தில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சின்னப்பனுக்கு.ஆதரவாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் வகையில் புதூர் ஒன்றியத்தின் தாப்பாத்தி அயன் ராஜா பட்டி, முத்தலாபுரம் கைலாசபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பின் போது அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்கள் யாரும் அரசியலில் நீடித்ததாக சரித்திரம் கிடையாது என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ.பேசினார்.

இந்த விளாத்திக்குளம் தொகுதிக்கு புரட்சித்தலைவி அம்மா 2006 ம் ஆண்டு அதிமுக வேட்பாளராக சின்னப்பனை அறிவித்தார்கள். அதில் வெற்றி பெற்று கடந்த 2006 ஆம் ஆண்டில் இருந்து 2011 ம் ஆண்டு வரை சின்னப்பன் எம்.எல்.ஏ வாக இருந்து இந்த விளாத்திக்குளம் தொகுதி வளர்ச்சி பெற பல்வேறு பனிகளை செய்து மக்களிடம் நற்பெயர் பெற்றவர்.

அதன் பின்பு மார்க்கண்டேயனுக்கு அதிமுக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு வழங்கினார். அம்மா அப்போது அம்மாவின் உத்திரவுக்கு கட்டுப்பட்டு தேர்தல் பணியாற்றி மார்க்கண்டேயன் வெற்றிக்கு பாடுபட்டாரே தவிர கட்சியை எதிர்த்து சுயேட்சையாக சின்னப்பன் போட்டியிடவில்லை. அதன்பின்பு அம்மா இந்த விளாத்திக்குளம் தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக உமா மகேஸ்வரியை அறிவித்தார்கள். கட்சியின் உத்திரவுப்படி சின்னப்பன் தேர்தல் பனியாற்றி உமா மகேஸ்வரியை வெற்றி பெற வைத்தாரே தவிர சுயேட்சையாக போட்டியிடவில்லை இப்படி காலமெல்லாம் கட்சிக்கு உண்மையாக பனியாற்றிய நல்லவர், நேர்மையானவர். தொகுதி மக்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் சின்னப்பன் எப்படி கட்சிக்கு உண்மையாக இருந்தாரோ.

அதேபோல் இந்த விளாத்திக்குளம் தொகுதி மக்களுக்கும் இந்த தொகுதி வளர்ச்சிக்கும் உண்மையாக பணியாற்றக் கூடியவர். நமது அதிமுக வேட்பாளர் சின்னப்பனுக்கு விளாத்திக்குளம் மக்கள் இரட்டை இலை சின்னத்திற்க்கு வாக்களித்து இமாலய வெற்றியைத் தரவேண்டும்.

அதே போல் மத்தியில் உறுதியான முடிவு எடுத்து நாடு நலம்பெற. நல்லாட்சி தரக்கூடிய. பிரதமர் நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்கிட. தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் அக்கா தமிழிசை சவுந்திரராஜனுக்கு தாமரை சின்னத்திலும் வாக்களித்து மாபெறும் வெற்றியை தரவேண்டும். என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ. பிரச்சாரம் செய்தார்.

இந்த பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளர்,சின்னப்பன், கழக அமைப்பு செயலாளர் சின்னத்துரை, முன்னால் எம்.எல்.ஏ. மோகன், விளாத்திக்குளம் ஒன்றிய செயலாளர் ஞானகுருசாமி, புதூர் யூனியன் முன்னால் பெருந்தலைவர் தனஞ்செயன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி குட்லக் செல்வராஜ், பரும்புக்கோட்டை பாலமுருகன், தலைமை கழக பேச்சாளர் முருகானந்தம் உட்பட கலந்து கொண்டனர்