சிறப்பு செய்திகள்

கழகம் சார்பில் 3-ந்தேதி இப்தார் நோன்பு திறப்பு – ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்பு…

சென்னை

கழகத்தின் சார்பில் வரும் 3-ந்தேதி (திங்கட்கிழமை) இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் கழக ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் கழகத்தின் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இப்தார்நோன்பு திறப்பு நிகழ்ச்சியை நடத்துவது வழக்கம். அம்மா அவர்களின் வழியை பின்பற்றி கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

நிகழ்ச்சிக்கு அமைச்சர் நிலோபர் கபீல் தலைமை வகிக்கிறார். முதலமைச்சர், துணை முதலமைச்சர் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள். இறுதியில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அன்வர்ராஜா நன்றி கூறுகிறார்.