சேலம்

கழகம் தலைமையிலான கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும் – ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. நம்பிக்கை…

சேலம்:-

கழகம் தலைமையிலான கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்று சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. பேசினார்.

சேலம் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிவதாபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சேலம் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். சங்கத் தலைவர் ஏ.எஸ்.பாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். பகுதி செயலாளர்கள் தியாகராஜன், கே.ஆர்.எஸ்.சரவணன், சண்முகம், அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் ஜான் கென்னடி, துணைத் தலைவர் ராஜா, 22 வது வட்ட கழக செயலாளர் கே.சி.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநகர் மாவட்ட செயலாளர் ஜி,வெங்கடாஜலம் எம்.எல்.ஏ., சேலம் மாநகர அவைத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வி.பன்னீர்செல்வம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.கே.செல்வராஜ், முன்னாள் மேயர் எஸ்.சவுண்டப்பன், முன்னாள் துணை மேயர் நடேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்த கூட்டத்தில் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

அண்ணா தொழிற் சங்க நிர்வாகிகள் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அனைவரும் நல்ல ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அம்மா வழியில் ஆட்சி நடத்தும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்காக கழகம் தலைமையில் வெற்றிக் கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தேர்தல் வெற்றிக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. பேசினார்.

இக்கூட்டத்தில் மகளிர் அணி செயலாளர் ஜமுனா ராணி, மாநகர இணை செயலாளர் பாமா கண்ணன், மகளிரணி இணை செயலாளர் ஈஸ்வரி, உமாராஜ், வெங்கட லட்சுமி, வட்ட கழக செயலாளர் விநாயகம் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனர்.