தற்போதைய செய்திகள்

கழக அம்மா பேரவை சார்பில் பாரம்பரிய கலை போட்டி – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்

மதுரை

கழக அம்மா பேரவை மற்றும் அம்மா சேரிடபிள் டிரஸ்ட் சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தமிழ்நாடு பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டு போட்டி மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் 10,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கரகாட்டம், கருப்பசாமி ஆட்டம், காவடி ஆட்டம், கும்மி பாட்டு, நாடகம், வில்லுப்பாட்டு, ஒயிலாட்டம், கோலாட்டம், இசைக்கச்சேரி போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முதல் பரிசாக ரெண்டு குழுக்களுக்கு 25 ஆயிரமும், இரண்டாம் பரிசாக இரண்டு குழுக்களுக்கு ரூ.20 ஆயிரமும், மூன்றாம் பரிசாக இரண்டு குழுக்களுக்கு ரூ.15 ஆயிரமும், நான்காம் பரிசாக ரூ.10 ஆயிரமும், ஐந்தாம் பரிசாக இரண்டு குழுக்களுக்கு ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரிசுகள் வழங்கி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் திருப்பெயரால் அம்மாவின் புகழை உலகிற்கு எடுத்துச் சொல்லும் வகையில் இது போன்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இளைஞர்களுக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் எண்ணற்ற திட்டங்கள் தந்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.

உலக முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க தமிழகம் தான் சிறந்த இடம் என்ற உலகிற்கு எடுத்துச் சொல்லும் வகையில் தேசிய புள்ளிகள் துறை சார்பாக ஒரு ஆய்வு மேற்கொண்டது.அதில் இந்திய அளவில் பொருளாதார வளர்ச்சி 6.81 சதவீதமாக இருந்து வந்த போதிலும் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 8.17 சதவீதமாக இருந்தது. இந்திய அளவில் தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

அதுமட்டுமல்லாது விவசாயம், உற்பத்தி, கட்டுமானம், தகவல் தொடர்பு, நிதி மேலாண்மை, சுற்றுலா, மருத்துவம், உள்ளாட்சி என போன்ற துறைகளில் இந்தியாவில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது என்று வெளியிட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் வினய், மதுரை மாநகர காவல்துறை ஆணையாளர் டேவிட்சன் ஆசீர்வாதம், மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன், பிரித்தி பிரீதி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் சிவகுமார், அம்மா சேரிடபிள் டிரஸ்ட் செயலாளர் பிரியதர்ஷினி, கல்லூரி பேராசிரியர்கள் வேம்பு, ராஜசேகர், கண்ணன், சங்கரலிங்கம், ஜெனட்சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.