தூத்துக்குடி

கழக அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் – ஒன்றிய செயலாளர்களுக்கு மாவட்ட செயலாளர் அறிவுரை…

தூத்துக்குடி:-

தூத்துக்குடி மாவட்டத்தில் கழக அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் தொடங்குகிறது.

கழக அரசின் சாதனைகளை விளக்கி தூத்துக்குடி மாவட்டத்தில் 75 இடங்களில் மாவட்ட கழகம் சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டங்கள் நடத்தப்பட இருக்கிறது. இந்த தெருமுனை பிரச்சார கூட்டம் இன்று தொடங்கி 11-தேதி வரை நடக்கிறது. தூத்துக்குடி ஒன்றியம், ஆழ்வார்திருநகரி ஒன்றியம், உடன்குடி ஒன்றியம், சாத்தான்குளம் ஒன்றியம், விளாத்திக்குளம் ஒன்றியம், புதூர் ஒன்றியம், கோவில்பட்டி நகரம், காயல்பட்டணம் நகரம், தூத்துக்குடி கிழக்கு பகுதி, ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம், கருங்குளம் ஒன்றியம், திருச்செந்தூர் ஒன்றியம், ஓட்டப்பிடாரம் ஒன்றியம், கயத்தார் ஒன்றியம், கோவில்பட்டி ஒன்றியம், தூத்துக்குடி மேற்கு பகுதி, தூத்துக்குடி வடக்கு பகுதி, தூத்துக்குடி தெற்கு பகுதி ஆகிய இடங்களில் இந்த தெருமுனை பிரசார கூட்டங்கள் நடக்கிறது.

இந்த தெருமுனை பிரச்சார கூட்டங்களை சிறப்பாக நடத்துவது குறித்து ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட கழக செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை வகித்து ஆலோசனை வழங்கினார்.

கழக அமைப்பு செயலாளர் சின்னத்துரை முன்னிலை வகித்தார். மாவட்ட கழக செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் பேசுகையில், மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான நல்லாட்சியின் சாதனைகளை மக்களிடம் தெருமுனை பிரச்சாரம் மூலம் கழகத்தினர் எடுத்து சொல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் செல்லத்துரை, மாவட்ட கழக பொருளாளர் ஜெபமாலை, மாவட்ட தொழிற்சங்க செயலாளர் டாக்டர் ராஜா, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் ராஜசேகரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் குருத்தாய், பொதுக்குழு உறுப்பினர் அய்யாத்துரை பாண்டியன், திருச்செந்தூர் முன்னாள் தொகுதி கழக செயலாளர் வடமலைப்பாண்டியன். தொகுதி கழக இணை செயலாளர் ராஜா நேரு, தூத்துக்குடி கூட்டுறவு சங்க தலைவர் சு.ஞானராஜ், தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சங்கரேஸ்வரி, முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், ஒன்றிய செயலாளர்கள் தூத்துக்குடி சண்முகவேல், உடன்குடி மகாராஜன், சாத்தான்குளம் சவுந்திரராஜன், ஆழ்வார்திருநகரி ராஜ்நாராயணன், ஸ்ரீ வைகுண்டம் ஆறுமுகநயினார், திருச்செந்தூர் ராமச்சந்திரன், கருங்குளம் செங்கான், ஓட்டப்பிடாரம் தர்மராஜ், விளாத்திக்குளம் பால்ராஜ், புதூர் ஞானகுருசாமி, கயத்தார் வினோபாஜி, மற்றும் வல்லநாடு விஜயஉடையார், ஸ்ரீ வைகுண்டம் விஜயகுமார், தலைமை கழக பேச்சாளர் முருகானந்தம், நகர செயலாளர்கள் காயல்பட்டிணம் செய்யது இப்ராகிம், விளாத்திக்குளம் நெப்போலியன், பெருங்குளம் செல்லத்துரை, ஆத்தூர் ராஜா, தென்திருப்பேரை சிவலிங்கம், நாசரேத் கிங்ஸ்லி, ஆழ்வார் திருநகரி அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் செந்தில்ராஜன், புதூர் அம்மா பேரவை செயலாளர் வெற்றிவேல், போக்குவரத்து மண்டல இணை செயலாளர் சங்கர் டெரன்ஸ், சண்முககனி, ராஜேந்திரன், பேச்சியப்பன், அந்தோணி, டாஸ்மாக் மாவட்ட செயலாளர் விஜயகுமார், 50-வது வார்டு அமல்ராஜ், வழக்கறிஞர் சீனிவாசன், ஜெபராஜ், சாம்கவுதம், கோர்ட் காசி பிளம்பர் இசக்கிமுத்து, ஆபீஸ் பொறுப்பாளர் கனி உள்பட ஏராளமான கழகத்தினர் கலந்து கொண்டனர்.