திருநெல்வேலி

கழக அரசின் சாதனை விளக்க பிரச்சார வாகனங்கள் – மாவட்ட செயலாளர் தச்சை கணேஷ்ராஜா துவக்கி வைத்தார்…

திருநெல்வேலி:-

கழக அரசின் சாதனைகளை விளக்கி திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் 5 சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் மற்றும் தெருமுனை விளக்கக் கூட்டம் நடத்துவதற்கான 10 வாகனங்களை திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழக செயலாளர் தச்சை கணேஷ்ராஐா துவக்கி வைத்தார்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பேச்சாளர்கள் மூலம் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாகன பிராச்சாரம் செய்ய தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி நெல்லை மாநகர் மாவட்ட கழகத்திற்குட்பட்ட சங்கரன்கோவில், பாளையங்கோட்டை, வாசுதேவநல்லூர், கடையநல்லூர், திருநெல்வேலி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கழக அரசின் சாதனைகளையும் திட்டங்களையும் விளக்கி ஒரு தொகுதிக்கு 2 பிரச்சார வாகனங்கள் வீதம் மொத்தம் 10 வாகனங்களை நெல்லை மாநகர் மாவட்ட கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த பிரச்சார வாகனத்தின் துவக்க விழா நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பிரச்சார வாகனங்களை மாநகர் மாவட்ட கழக செயலாளர் தச்சை கணேஷ்ராஐா துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், புரட்சித்தலைவி அம்மா வழிகாட்டுதலின்படி நடைபெற்று வரும் கழக அரசு மக்களின் நலன் கருதி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தந்துள்ளது. பொங்கல் பண்டிகையின் போது தமிழக மக்கள் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1000 ரொக்கப்பரிசை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்.

தற்போது வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 60 லட்சம் பேருக்கு ரூ.2000 வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களில், விவசாயிகளுக்கும் சலுகைகளும் வழங்கப்பட உள்ளன. இன்று தொடங்கி வைக்கப்பட்டு இந்த 10 பிரச்சார வாகனங்கள் தினமும் 2 இடங்களில் மொத்தம் 20 இடங்களில் கழக பேச்சாளர்களை கொண்டு திட்டங்கள், சாதனைகள் குறித்து விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் சங்கரலிங்கம், பேரவை செயலாளர் ஜெரால்டு, சிறுபான்மை பிரிவு மகபூர்ஜான், பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, மாதவன், முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில்ஆறுமுகம், தலைமைக்கழக பேச்சாளர்கள் ராஐகுமாரி, வாஸ்து தளவாய் வெள்ளப்பாண்டி, காந்திமதிநாதன், வக்கீல் வெயிலுமுத்து மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.