தற்போதைய செய்திகள்

கழக கூட்டணி வெற்றி கூட்டணி தி.மு.க. கூட்டணி வெற்று கூட்டணி : கழக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் பேச்சு…

சேலம்:-

கழகம் அமைத்துள்ள கூட்டணி வெற்றிக் கூட்டணி. தி.மு.க. அமைத்துள்ள கூட்டணி வெற்றுக் கூட்டணி என்று கழக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் கூறினார்.

புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் மண்டல அளவில் தேர்தல் பணி ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல்லில் இக்கூட்டம் நடத்தப்பட்டு விட்டது. நேற்று சேலத்தில் மண்டல அளவிலான கழக அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அம்மா பேரவை மாவட்ட செயலாளர்கள் சேலம் மாநகர் மாவட்டம் எஸ்.பி.சரவணன்,கிருஸ்ணகிரி பி.செல்வம்,நாமக்கல் ஈ.ஆர்.சந்திரசேகர்,பெரம்பலூர் உதயம் எஸ்.ரமேஷ் ஆகியோர் வரவேற்று பேசினர்.

இக்கூட்டத்தில் கழக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் பேசியதாவது:- 

அ.இ.அ.தி.மு.க. அமைத்துள்ள கூட்டணி வெற்றிக் கூட்டணி. இந்த கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி. தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணி வெற்றுக் கூட்டணி. கழகம் தலைமையில் அமைந்துள்ள கூட்டணி கெத்து கூட்டணி. கழகத்தில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒன்றே ஒன்று தான் செய்ய வேண்டும். ஆளுக்கு ஒரு ஓட்டு சேகரித்தால் போதும். 3 கோடி ஓட்டு கிடைக்கும்.

தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 84 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 3 கோடி வாக்காளர்களை பெற்று விட்டால் நாம் வெற்றி பெற்று விடுவோம். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பல லட்சம் பேருக்கு பச்சை மையில் கையெழுத்து போடும் வாய்ப்பை கொடுத்தார். அவர் தொண்டர்களிடம் கேட்டுக் கொண்ட கோரிக்கை என்னவன்றால் எனக்கு பிறகும் கழகம் 100 ஆண்டுகள் ஆட்சி செய்ய வேண்டும் என்பது தான். அவரது கோரிக்கையை நிறைவேற்ற கழக தொண்டர்கள் தீவிர களப்பணியாற்றி கழக வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

இவ்வாறு செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் பேசினார்.