தற்போதைய செய்திகள்

கழக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சரத்குமார் 10 நாட்கள் சூறாவளி பிரச்சாரம்…

சென்னை

கழக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் சரத்குமார்  நாளை முதல் 10 நாட்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமியை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரும், திரைப்பட நடிகருமான ஆர்.சரத்குமார் ஏற்கனவே சந்தித்து கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததோடு இக்கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்யப்போவதாக அறிவித்திருந்தார்.

அதன்படி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் கழகம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் 10 நாட்கள் சூறாவளி பிரச்சாரம் கொள்கிறார். நேற்று பொள்ளாச்சியில் அவர் பிரச்சாரத்தை தொடங்கினார். 4-ந்தேதி நாமக்கல்லிலும், 7-ந்தேதி சோளிங்கர், ஆம்பூர், வாணியம்பாடியிலும், 8-ந்தேதி வேலூர், ஆரணி, திருவண்ணாமலையிலும், 9-ந்தேதி அரூர், பாப்பிரெட்டிபட்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூரிலும் பிரச்சாரம் செய்கிறார்.

10-ந்தேதி கள்ளக்குறிச்சி, விழுப்புரத்திலும், 11-ந்தேதி பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல்லிலும், 12-ந்தேதி மதுரை, தேனி, விருதுநகர், சாத்தூரிலும், 13-ந்தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரியிலும், 14-ந்தேதி நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், சிதம்பரத்திலும் சரத்குமார் கழக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.