தற்போதைய செய்திகள்

கழக கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறும் – அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி

தருமபுரி

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கழக கூட்டணி வேட்பாளர்கள் 100 சதவீதம் வெற்றி பெறுவார்கள் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் நேற்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைகெபற்றது. தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட கெரகோடஹள்ளி கிராமத்தில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு மையத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அவரது மனைவி மல்லிகா அன்பழகன் ஆகியோர் குடும்பத்துடன் சென்று வரிசையில் நின்று தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.

பின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தருமபுரி, நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் அரூர், மொரப்பூர், காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம் ஏரியூர் ஆகிய பத்து ஒன்றியங்களில் 188 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் உருவாக்கப்பட்ட இரண்டு புதிய ஒன்றியங்களான ஏரியூர், கடத்தூர் ஆகிய ஒன்றியங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. அம்மாவின் அருளாசியோடு இந்த பத்து ஒன்றியங்களிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணி கட்சி வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள். இங்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெறுவார்கள்.

தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் 18 பேர்களில் அதிகப்படியான இடங்களை பிடித்து அம்மாவின் ஆசியோடு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவியை கழகம் தலைமையிலான கூட்டணி பிடிக்கும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.