காஞ்சிபுரம்

கழக மெகா கூட்டணியின் வெற்றி உறுதியாகி விட்டது -சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் பேச்சு…

காஞ்சிபுரம்:-

தோல்வி பயத்தில் எதிர்க்கட்சிகள் உளறி வருவதால் கழக மெகா கூட்டணியின் வெற்றி உறுதியாகி விட்டது என்று காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் கூறினார்.

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதிக் கழகம் சார்பில் அம்மாவின் 71வது பிறந்தநாளையொட்டி மாபெரும் பொதுக்கூட்டம் மடிப்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி கழக செயலாளர் கே.பி.கந்தன் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் பேசியதாவது:- 

எனக்கு பின்னாலும் இந்த இயக்கம் 100 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி புரியும் என்று இதயதெய்வம் அம்மா அவர்கள் குறிப்பிட்டதை நிரூபிக்கும் வகையில் இன்றைய தினம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைத்த மெகா கூட்டணியை கண்டு எதிர்கட்சிகள் கதிகலங்கி போய் உள்ளனர்.

குறிப்பாக மு.க.ஸ்டாலின் செய்வதறியாது திகைத்து நிற்கிறார். கழகம் அமைத்த கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. இதனை அனைத்து ஊடகங்களும் உறுதிப்படுத்தி விட்டன. இப்போது ஸ்டாலின் என்ன பேசவேண்டும் என்று தெரியாமல் ஏதேதோ வாய்க்கு வந்தபடி உளறி வருகிறார். திருப்பூரிலே துறைமுகம் அமைப்பேன் என்கிறார். திருப்பூரிலே எப்படி துறைமுகம் அமைப்பார் என்றே தெரியவில்லை.

அம்மா அவர்கள் கொண்டுவந்த திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்திவரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையின் கீழ் இயங்கும் கழக அரசு கொண்டுவந்த புரட்சிகரமான திட்டங்களை மக்கள் பாராட்டுகிறார்கள். போற்றுகிறார்கள். அனைத்து திட்டங்களும் ஏழை எளியவர்களை சென்றடைந்துள்ளன. மக்கள் நலனை காக்கும் வலுவான கூட்டணி அமைந்துள்ளது. இதனால் ஸ்டாலின் நம்மீது பொறாமை கொண்டு செய்வதறியாது மேடையில் உளறி வருகிறார்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகளை டெபாசிட் இழக்கச் செய்து அனைத்து இடங்களிலும் கழக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று புதியதோர் சரித்திரம் படைக்கும் என்பது நிச்சயம். நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது. நாம் அனைவரும் அம்மா வகுத்த பாதையில் பயணித்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் புதிய சரித்திரம் படைக்க நாம் உறுதி கொள்வோம்.

இவ்வாறு காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் பேசினார்.