தூத்துக்குடி

கழக வேட்பாளரை ஒருலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வோம் – தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. பேச்சு…

தூத்துக்குடி:-

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் பணிகள் குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ தலைமை தாங்கி பேசியதாவது:-

தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் யாரை சுட்டிக் காட்டுகிறார்களோ அந்த வேட்பாளரை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்வோம், ஆடம்பரமின்றி தேர்தல் பிரச்சாரத்தை நாம் கடைபிடிக்க வேண்டும், நானே நேரில் வந்து ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக கட்சிக்காரர்களை சந்தித்து தேர்தல் பணிகளை தொய்வின்றி நடைபெற செய்வேன். அதற்கான தேர்தல் பூத் கமிட்டிகள் ஒன்றியம் நகரம் பேரூராட்சி மாநகர பகுதிகள் வாரியாக உடனடியாக அமைத்து தேர்தல் களப்பணியை உடனே துவங்கிட வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. பேசினார்.