தற்போதைய செய்திகள்

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மனைவி மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்…

சென்னை

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்ரதின் மனைவி கௌரம்மாள் மறைவு செய்தி அறிந்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:-

ஏராளமான திரைப்படங்களுக்கு பொருள் பொதிந்த பாடல்களை எழுதி உள்ள “மக்கள் கவிஞர்” மறைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் அன்பு மனைவி கௌரவம்மாள் 3.4.2019 அன்று உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வருத்தம் அடைந்தேன்.

கௌரவம்மாள், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்கு நல்லதொரு மனைவியாகவும், பக்க பலமாகவும் திகழ்ந்தவர். கௌரவம்மாளின் மறைவு அவருடைய குடும்பத்தினருக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஆகும்.கௌரவம்மாளை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.