தற்போதைய செய்திகள்

காமக்கூரில் புதிய தேர் வெள்ளோட்டம் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை:-

காமக்கூரில் புதிய தேர் வெள்ளோட்டத்தை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த காமக்கூரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அமிர்தாம்பிகை சமேத சந்திரசேகரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு புதியதாக தேர் செய்து தர வேண்டும் வேண்டும் என்று கிராம மக்கள விடுத்த கோரிக்கையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதையடுத்து முதலமைச்சரின் உத்தரவின் பேரில் புதிய தேர் செய்ய ரூ.33 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து சின்னசேலத்தை சேர்ந்த ஸ்தபதி பழனிவேல் புதிய தேர் செய்யும் பணியில் ஈடுபட்டார். தேர் செய்யும் பணி முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று காமக்கூரில் வெள்ளோட்டம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வடம் பிடித்து இழுத்து தேர் வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து தேர் முக்கிய பாதைகள் வழியாக வீதியுலா சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது.

முன்னதாக வெள்ளோட்ட நிகழ்ச்சிக்கு வருகை தந்த அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரனுக்கு கோயில் நிர்வாகம் சார்பிலும், கிராம மக்கள் சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது திருவண்ணாமலை மத்திய கூட்டுறவு வங்கியின் துணைத்தலைவர் க.சங்கர் கிராம மக்கள் சார்பில் அமைச்சருக்கு தேர்வடிவிலான நினைவு பரிசினை வழங்கினார்.

புதிய தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.சு.கந்தசாமி, செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரா.செந்தில்வேலவன், ஆரணி கோட்டாட்சியர் மைதிலி, உதவி ஆணையாளர் அ.ஜான்சிராணி, திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் துணைத்தலைவர் க.சங்கர், மாவட்ட பால் கூட்டுறவு சங்க துணைத் தலைவர் பாரி பி.பாபு, முன்னாள் எம்.எல்.ஏ அரங்கநாதன், மேற்கு ஆரணி ஒன்றிய செயலாளர் எம்.வேலு, ஆரணி ஒன்றிய செயலாளர் பி.ஆர்.ஜி.சேகர், நகர செயலாளர் எ.அசோக்குமார், பாசறை மாவட்ட செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் அ.கோவிந்தராசன், பொதுக்குழு உறுப்பினர் சின்னக்குழந்தை, சேத்பட் ஒன்றிய செயலாளர் ராகவன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ப.திருமால், சுரேஷ், மாணவரணி குமரன், முன்னாள் ஊராட்சி தலைவர் கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.