மதுரை

காமெடி செய்வதில் வடிவேலுவை மிஞ்சி விட்டார் ஸ்டாலின் – வி.வி.ஆர்.ராஜ்சத்யன் பிரச்சாரம்

மதுரை

காமெடி செய்வதில் வடிவேலுவை மிஞ்சிவிட்டார் ஸ்டாலின் சென்று வி.வி.ஆர் ராஜ்சத்யன் கூறினார்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள சாக்கிலிபட்டி, தனக்கன்குளம் ஆகிய பகுதிகளில் கழகம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பொறுப்பாளரும், கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளருமான வி.வி.ஆர் ராஜ்சத்யன், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் பிரச்சாரம் செய்தனர்.

இதில் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் பேசியதாவது:-

உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டாம் என்று முதன்முதலில் வழக்கு போட்டவர் ஸ்டாலின். தொடர்ந்து மூன்று முறை வழக்கு போட்டார். அதற்கு உச்சநீதிமன்றம் தேர்தலை ஏன் நடத்தக் கூடாது என்று மக்களை சந்தியுங்கள் என்று கூறி உள்ளது. ஆனால் தோல்வி பயத்தால் இன்று வரை தி.மு.க மக்களை சந்திக்கவில்லை.

ஸ்டாலின் பேசும்போது துண்டுசீட்டு வைத்து கொண்டு தான் பேசுவார். அதில் கூட தப்பும் தவறுமாக பேசுவார். இன்றைக்கு இளைஞர்கள் வலைதளங்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். அந்த வலைதளங்களில் முன்பெல்லாம் வடிவேல் படத்தை போட்டு மீம்ஸ் போடுவார்கள். தற்போது ஸ்டாலின் பண்ணுகிற கூத்தை பார்த்து ஸ்டாலின் படத்தை போட்டு மீம்ஸ் போடுகிறார்கள். காமெடியில் வடிவேலுவை ஸ்டாலின் மிஞ்சிவிட்டார். அவரை யாரும் தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை

திமுக நடத்திய பேரணி புளித்துப் போன பேரணி. அந்த பேரணியால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. இதன்மூலம் அரசியல் ஆதாயம் தேட நினைத்தார். ஆனால் அது எடுபடவில்லை ஆகவே இது போன்ற துரோகிகளுக்கு மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்

இக்கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஓம்.கே.சந்திரன்,
திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.