சிறப்பு செய்திகள்

காவல்துறையில் 234 பேருக்கு பணி நியமன ஆணைகள் – முதலமைச்சர் நேரில் வழங்கி வாழ்த்து…

சென்னை:-

தமிழ்நாடு காவல்துறையின் தொழில்நுட்ப சேவைகள் பிரிவில் காலியாகவுள்ள உதவி ஆய்வாளர் (தொழில்நுட்பம்) பணியிடங்களை நிரப்பிட தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, சுமார் 29,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அவ்விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, எழுத்து தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு உதவி ஆய்வாளர் (தொழில்நுட்பம்) பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 234 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் நிரஞ்சன் மார்டி, காவல்துறை தலைமை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் கே.பி.மகேந்திரன், காவல்துறை இயக்குநர் (தொழில்நுட்ப பணிகள்) என்.தமிழ்செல்வன், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் முனைவர் அ.கா.விஸ்வநாதன், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ம.நா.மஞ்சுநாதா, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் ஜெ.கே.திரிபாதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.