இந்தியா மற்றவை

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகள் பலி…

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

துரிகம் என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சிஆர்பிஎப், ராணுவத்துடன் இணைந்து காவல்துறையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதை அடுத்து, பாதுகாப்பு படை வீரர்கள் திருப்பி தாக்கினர். இருதரப்புக்கும் இடையிலான கடும் துப்பாக்கிச்சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த மோதலில் காவல் துணை கண்காணிப்பாளரான அமன் தாக்கூர் என்பவர் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து வீர மரணம் அடைந்தார். ஒரு ராணுவ அதிகாரி, 2 வீரர்கள், கிராம மக்கள் 2 பேர் காயமடைந்தனர்.