இந்தியா மற்றவை

காஷ்மீரை மறந்துவிடுங்கள்: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

‘‘காஷ்மீரை மறந்துவிடுங்கள். அதைப் பற்றி நீங்கள் சிந்திக்கவும் கூடாது’’ என்று பாகிஸ்தானுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்தார்.

ஹரியாணா மாநில சட்டப் பேரவைக்கு அக்டோபர் 21-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக ஹரியாணாவின் கர்னால் என்ற இடத்தில் பாஜக சார்பில் நேற்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

வளைகுடா பகுதியில் தீவிர வாத பதற்றத்தை குறைக்க முயற்சிப்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஈரான் சென்றுள்ளார். ஆனால், இந்தியா வுக்கு எதிராக தீவிரவாதத்தை பாகிஸ்தான் தூண்டிவிடுகிறது. இந்தியாவுக்கு எதிரான தீவிர வாதிகளை தங்கள் நாட்டில் பாகிஸ்தான் ஊக்குவிக்கிறது.

உண்மையிலேயே தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்று இம்ரான் கான் விரும்பினால், அதற்கு நாங் கள் உங்களுக்கு உதவத் தயாராக இருக்கிறோம். தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஒழிக்க விரும்பி அதற்கு இந்தியாவின் உதவி யைக் கோரினால் அதற்காக பாகிஸ் தானுக்கு ராணுவத்தை அனுப்ப நாங்கள் தயாராக இருக்கிறோம்.

காஷ்மீர் சுதந்திரம் அடையும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ளார். காஷ்மீ்ரை நீங்கள் மறந்துவிடுங்கள். காஷ் மீரைப் பற்றி பாகிஸ்தான் சிந்திக்க வும் கூடாது.காஷ்மீர் இந்தியாவின் ஒருங் கிணைந்த பகுதி. இதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.

இது தொடர்பாக வேறு எந்த நாடும் எங்களுக்கு அழுத்தமும் தரமுடியாது. 1947-ல் இந்தியாவை இரண்டாக பிரித்து பாகிஸ்தான் உருவானது. ஆனால், 1971-ல் பாகிஸ்தானே இரண்டானது. காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ் தானின் போக்கு இதேபோன்று தொடர்ந்தால் அந்நாடு மேலும் உடைவதை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.