கோவை

கிணத்துக்கடவு தொகுதியில் ரூ.92.30 லட்சத்தில் வளர்ச்சிப்பணிகள் – எட்டிமடை எ.சண்முகம் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்…

கோவை:-

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி 95 மற்றும் 96 ஆகிய வார்டுகளில் ரூ.92.30 லட்சம் மதிப்பீட்டிலான வளர்ச்சிப்பணிகளை சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை எ.சண்முகம் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை எ.சண்முகம் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா வழியில் சிறப்பான முறையில் கழக ஆட்சியை நடத்தி வரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழகத்தை வளர்ச்சிப்பாதையை நோக்கி அழைத்து சென்று கொண்டிருக்கின்றனர்.கோவை மாவட்டத்தில் 50 ஆண்டு காலத்தில் இல்லாத வளர்ச்சியை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்து கொடுத்துள்ளார்.

தற்பொழுது கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட 95-வது வார்டு பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, சல்பி நகர், புதுவசந்தம் நகர் மற்றும் இல்மு நகர் ஆகிய பகுதிகளில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, மதினா நகர் பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி ஆகிய பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 96-வது வார்டுக்குட்பட்ட தாயம்மாள் லே-அவுட் பகுதியில் ரூ.9.20 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடிக்கு சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பிடம் கட்டும் பணிக்கும், அறிஞர் அண்ணா காலனி பகுதி அங்கன்வாடிக்கு ரூ.8.10 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பிடம் கட்டும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன.

கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியின் வளர்ச்சி பணிகளுக்கு எப்போது நிதியை கேட்டாலும் உடனே ஒப்புதல் வழங்கி ஆணை பிறப்பிக்கின்ற முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகிய அனைவருக்கும் என் சார்பிலும் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி மக்கள் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் குறிச்சி பகுதி செயலாளர் எம்.பெருமாள்சாமி, மீனவர்அணி செயலாளர் எச்.எஸ்.பாவா, வார்டு செயலாளர்கள் கே.என்.செந்தில்குமார், எச்.எஸ்.ஹிழர், இளம்பொறியாளர்கள் சபரிராஜு, கணேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் பஷீர், நிசார், ரபிக், சிவராஜ் மேஸ்திரி, பாபு, ரிஸ்வான், சாலிபாய், சாகுல்அமீது, ராஜ்கபூர், கலில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.