இந்தியா மற்றவை

குஜராத் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட அமித்ஷா வேட்பு மனு தாக்கல்…

கமதாபாத்,
மாநிலங்களவை உறுப்பினராக உள்ள பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, முதல் முறையாக மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்.  இதற்கான வேட்புமனுவை இன்று அவர் தாக்கல் செய்தார்.  முன்னதாக அவர் அகமதாபாத்தில் நடைபெற்ற  மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் பிரமாண்ட பேரணியிலும் பங்கேற்றார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,  நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் அமித்ஷாவுக்கு  ஆதரவாக பேரணியில் கலந்து கொண்டனர்.
இதேபோல், சிவசேனா தலைவர் உத்தவ் தக்கரே, பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங், ராம்விலாஸ்  பஸ்வான் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். அகமதாபாத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவுக்கு பேரணி நடைபெற்றதாக செய்திகள் வெளியாகின்றன.
எனினும், இந்த பேரணியில் பாஜக மிக மூத்ததலைவர் எல்.கே.அத்வானி  பங்கேற்கவில்லை.  அத்வானி காந்திநகர் தொகுதியில் 6 முறை வெற்றி பெற்றவர் ஆவார். அவரது தொகுதியே தற்போது அமித்ஷாவுக்கு  வழங்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் மூத்த தலைவர்கள் அனைவரும் அமித்ஷா வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஆதரவாக காந்திநகர் பகுதியில் கூடினர்.