தற்போதைய செய்திகள்

குண்ணத்தூரில் கிருமிநாசினி தெளிக்கும் பணி – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆய்வு

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த குண்ணத்தூரில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெறுவதை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்கவும், திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ஆரணி சட்டமன்ற தொகுதியில் உள்ள மேற்கு ஆரணி ஒன்றியத்தில் உள்ள 37 ஊராட்சிகள், ஆரணி ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகள், ஆரணி நகராட்சி, கண்ணமங்கலம் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நடைபெறுவதை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் குண்ணத்தூரில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டவர்களிடம் அனைத்து தெருக்களிலும் தெளிக்கவும், குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி கிராமத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தினார். அப்போது அமைச்சரிடம் அங்கிருந்த தூய்மை காவலர்கள் அமைச்சரின் அறிவுரையை ஏற்று சிறப்பாக பணியாற்றுகிறோம் என உறுதி கூறினர். கிருமி நாசினி மருந்துகள் அடிக்கும் பணியில் ஊராட்சி அலுவலர்கள், ஆரம்ப சுகாதார அலுவலர்கள், மேற்கொண்டனர்.