இந்தியா மற்றவை

குருவாயூர் கோயிலில் 177 ஜோடிகளுக்கு திருமணம்…

திருவனந்தபுரம்:-

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோயிலும் ஒன்று. குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி விசாக திருவிழாவில் திருமணங்கள் மற்றும் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழாவின் முக்கிய முகூர்த்த நாள் விழா நேற்றுமுன்தினம் நடந்தது.இதையொட்டி குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் அன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று முன்தினம் மட்டும் 177 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

இதுபோல 697 குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. திருமணம் மற்றும் சோறு ஊட்டும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்தவர்களால் கோயிலின் திருமண மண்டபம் நிறைந்து காணப்பட்டது. குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் நடந்த இந்நிகழ்ச்சிகளால் கோயிலுக்கு அன்று ஒரு நாளில் மட்டும் ரூ.44 லட்சம் வருவாய் கிடைத்தது.கோயிலுக்கு வந்த பக்தர்கள் நடத்திய நெய் அபிஷேகம், பால் பாயாசம், துலாபாரம் நிகழ்ச்சிகள் மூலமும் கோயிலுக்கு கூடுதல் வருவாய் கிடைத்தது.