தற்போதைய செய்திகள்

கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தல் பணி – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் உறுதி…

திருவண்ணாமலை

கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தல் பணியாற்றுவோம் என்று அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் உறுதிபடத் தெரிவித்தார்.

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளராக மாநில விவசாய பிரிவு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து செங்கம் சட்டமன்ற தொகுதி சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வேட்பாளரை அறிமுகப்படுத்தினார்.

இக்கூட்டத்தில் பா.ம.க மாநில துணை பொதுச்செயலாளர் ரா.காளிதாஸ், மாவட்ட செயலாளர்கள் ஜானகிராமன், பிரசாத், பா.ஜ.க மாவட்ட தலைவர் நேரு, தொகுதி அமைப்பாளர் காந்தி, தேமுதிக மாவட்ட செயலாளர் வி.எம்.நேரு, த.மா.கா. மாவட்ட தலைவர் மணிவர்மா, புதிய நீதிக்கட்சி மாவட்ட செயலாளர் கஜேந்திரன், கோகுலம் மக்கள் கட்சி ராஐாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் அமுதா அருணாசலம் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசுகையில், அம்மாவின் அருளாசியுடன் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தியை கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும். இதற்காக கூட்டணி கட்சியினருடன் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என பேசினார்.

அதனைத்தொடர்ந்து வேட்பாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:-

அம்மா அவர்கள் நம்மிடையே இல்லாவிட்டாலும் நம் இதயங்களில் என்றென்றும் குடி கொண்டு இருக்கின்றார். இந்த தொகுதி என்னுடைய தொகுதி. 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 6 தொகுதிகளில் செங்கம் தொகுதி அதிக வாக்குகளை பெற்று தந்தது. அம்மா வழியில் ஆட்சியையும், கட்சியையும் வழிநடத்தி செல்லுகின்ற முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு வலிமை சேர்க்கும் விதமாக நமது தோழமை கட்சியினரோடு சேர்ந்து தொண்டர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றி வெற்றிபெற வேண்டும். நான் உங்களின் உணர்வுகளை புரிந்து செயல்படுவேன். தொகுதி வளர்ச்சிக்காகவும், மக்களுக்காகவும் இரவு பகல் பாராமல் பணியாற்றுவேன்.

இவ்வாறு அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட இணை செயலாளர் நளினி மனோகரன், துணை செயலாளர் எல்.என்.துரை, மாவட்ட மாணவர் அணி செயலாளர் பீரங்கி வெங்கடேசன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நாராயணன், மாவட்ட பொருளாளர் நைனாகண்ணு, மாவட்ட பாசறை செயலாளர் சத்யசிவக்குமார், இளைஞர் அணி செயலாளர் தொப்பளான், ஒன்றிய செயலாளர் ராஜா (எ) தேவராஜன், திருநாவுக்கரசு, மாவட்ட பேரவை இணை செயலாளர் முரளிமோகன், செங்கம் நகர செயலாளர் எ.ஆனந்தன், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.