சென்னை

கூட்டணி கட்சியினருடன் இணைந்து தீவிர பிரச்சாரம் – கழக பாக பொறுப்பாளர்களுக்கு ஆர்.எஸ்.ராஜேஷ் வேண்டுகோள்…

சென்னை:-

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றிபெற கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து தீவிர பிரசாரம் செய்ய வேண்டும் என்று பாக பொறுப்பாளர்களுக்கு வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல், மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் பெரம்பூர் பகுதி 14 வட்டங்களில் மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல், மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிடும் கழக வேட்பாளர், மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய வேண்டும். அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் நடைபெறும் கழகம் தலைமையிலான அரசு தமிழக மக்களுக்கு நிறைவேற்றித் தந்த எண்ணற்ற திட்டங்களை வாக்காளர்களிடம் எடுத்து கூறி பிரச்சாரம் செய்ய வேண்டும். பாக பொறுப்பாளர்களுடன் கூட்டணி கட்சி நிர்வாகிகளை அரவணைத்துக் கொண்டு தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் பெரம்பூர் பகுதி செயலாளர் ஜெ.கே.ரமேஷ், ஆர்.எஸ். ஜனார்த்தனம், ஏ.கணேசன், ஜி.கிருஷ்ணவேணி, மா.ஜெயபிரகாசம், மு.வெற்றிவேந்தன், ஏ.டேவிட்ஞானசேகரன், வியாசை எம்.இளங்கோவன், வீரமருது பாண்டியன், ஜி.ராஜேந்திரன், வி.கோபிநாத், எஸ்.ஏ.சூசை, டி.சரவணன், பா.இளங்கோவன், பாஞ்ச்பீர், என்.எம்.பாஸ்கரன், ஆர்.சுந்தரலிங்கம், எஸ்.மனோகரன், வெங்கடேசன், லோகநாதன், டி.கனகராஜ், ஆனந்த், டி.கே.மூர்த்தி, எம்.கண்ணா, ஜெ.எம்.நரசிம்மன், எம்.என்.சீனிவாசபாலாஜி, ஏழுமலை, இ.வேலுமேஸ்திரி, சந்தனசிவா, ஏ.வினாயகமூர்த்தி, ஆர்.வி அருண்பிரசாத், எம்.ராமமூர்த்தி, முத்துசெல்வம் வி.எஸ்.புருஷோத்தமன், எம்.விஜயகுமார், எஸ்.ஏ.லாலுபாய், எம்.மாலா, எம்.சீனிவாசன், தனபால் நகர் ஆர்.சிவகுமார், எம்.நாகூர்மீரான், வேல்முருகன், இருளாண்டி, பொன்முடி, எஸ்.சைலேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.