தற்போதைய செய்திகள்

சட்டமன்ற இடைத்தேர்தல்களில் கழகம் அமோக வெற்றி பெறும் – பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை…

சென்னை

சட்டமன்ற இடைத்தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெறும் என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில்  தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

4 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சாரத்துக்காக தே.மு.தி.க. சார்பில் பிரச்சாரம் செய்ய நான் செல்கிறேன். இந்த 4 தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

அது மட்டுமல்ல 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 18-ந்தேதி நடைபெற்ற தேர்தலிலும் கழகம் அமோக வெற்றி பெறும். இதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். இந்த ஆட்சி தொடர்ந்து நீடித்து 5 ஆண்டுகளை நிறைவு செய்யும்.