தற்போதைய செய்திகள்

சத்துணவு பணியாளர்களுக்கு சுகாதார பெட்டகங்கள் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்…

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 1666 சத்துணவு மையங்களில் புரியும் சத்துணவு பணியாளர்களுக்கு சுகாதார பெட்டகங்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பணியுரியும் சத்துணவு பணியாளர்களுக்கான சுகாதார பெட்டகம் வழங்கும் விழா ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் க.சு.கந்தசாமி தலைமை தாங்கினார். செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன் முன்னிலை வகித்தார். விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 1666 சத்துணவு பணியாளர்களை சுகாதார பெட்டகங்களை வழங்கினார்.

இவ்விழாவில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசியதாவது:-

சத்துணவு திட்டம் தமிழகத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் 1.7.1982 இன்று ஊரகப்பகுதிகளிலும், 15.9.1982 அன்று நகர் புறங்களிலும் செயல்படுத்தப்பட்டது பின்னர் அம்மா அவர்கள் தினசரி முட்டையுடன் பல்வேறு வகையான கலவை சாதங்கள் வழங்கினார். இத்திட்டம் மூலம் ஊட்டச்சத்து குறை பாடு உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் வழங்கப்படுவதால் அவர்களின் கல்வித்தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் கல்வி இடைநிறுத்தம் செய்வது முற்றிலம் தடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2014 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்கள் மூலம் பள்ளி செல்லும் 2,00,590 மாணவ, மாணவிகள் பயன் அடைந்து வருகிறார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் 2014 சத்துணவு மையங்களில் 3488 சத்துணவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். முதல் கட்டமாக 1666 சத்துணவு மையங்களுக்கு ரூ.8.41 லட்சம் மதிப்பில் சுகாதார பெட்டகங்கள் வழங்கப்படுகிறது. இதில் 6 டெட்டால் சோப், தலைக்கவசம் நெகவெட்டி, 5 துண்டு, 2 மேல் கவசம், ஆகியவை உள்ளது இவைகளை பணியாளர்கள் பயன் படுத்திக்கொண்டு மாணவர்களுக்கு சுகாதாரமான முறையில் உணவுகளை தயாரித்து தரவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.

விழாவில் மாவட்ட சத்துணவு திட்ட அதிகாரி ப.ராஜவேல், ஆரணி கோட்டாட்சியர் மைதிலி, ஆரணி ஒன்றிய செயலாளர் பி.ஆர்.ஜி.சேகர், வழக்கறிஞர் க.சங்கர், வேலூர் பால் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் பாரி பி.பாபு, மேற்கு ஆரணி ஒன்றிய செயலாளர் வேலு, பாசறை மாவட்ட செயலாளார் ஜி.வி.கஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் டி.கருணாகரன், முன்னால் ஒன்றிய குழுத்தலைவர் அ.கோவிந்தராசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.