இந்தியா மற்றவை

சந்திரனை ஆராய புதிய செயற்கைகோள் – இஸ்ரோ தலைவர் தகவல்

சந்திர மண்டலத்தில் இதுவரை யாரும் செல்லாத இடத்திற்கு சென்று ஆய்வு நடத்த செயற்கை கோள் விரைவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த செயற்கை கோள் உலகில் இதுவரை யாரும் செலுத்தாத இடத்திற்கு சென்று அங்கு ஆய்வு நடத்தும். சந்திரனில் தண்ணீர் உள்ளதா? கனிமவளங்கள் உள்ளதா? என்பதையும் இந்த செயற்கை கோள் ஆய்வு செய்யும் என்று தெரிவித்தார். அதேபோல் சூரிய மண்டலம், ஜூபிடர் உள்ளிட்ட கிரகங்களுக்கும் செயற்கை கோள் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.