இந்தியா மற்றவை

சந்திரயான் 2ல் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் நிலவு சுற்றுப் பாதை மேலும் குறைப்பு…

சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் நிலவு சுற்றுப் பாதை இன்று அதிகாலை இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டது.

இஸ்ரோ நிறுவனம் அனுப்பிய சந்திரயான் 2 கடந்த மாதம் 20ந் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிக்கப்பட்டு, அதன் நிலவு சுற்றுப்பாதை நேற்று குறைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று அதிகாலை 3.42 மணிக்கு லேண்டரின் சுற்றுப் பாதையை மேலும் குறைக்கும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

9 வினாடிகளுக்கு எஞ்சின் இயக்கப்பட்டதாகவும், இந்தப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற்றதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. தற்போது விக்ரம் கலம் குறைந்தபட்சம் 35 கிலோ மீட்டர், அதிகபட்சமாக 101 கிலோ மீட்டர் தொலைவில் இயங்கி வருகிறது. இதன் மூலம் 7ந் தேதி விக்ரம் கலத்தை நிலவில் தரையிறக்குவதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.