இந்தியா மற்றவை

சந்திராயன் 2 விண்கலத்திலிருந்து லேண்டர் விக்ரம் வெற்றிகரமாக பிரிந்தது…

நிலவின் சுற்றுவட்டப் பாதையில், சந்திராயன் 2 விண்கலத்திலிருந்து லேண்டர் விக்ரம் வெற்றிகரமாக பிரிந்துள்ளது.

நிலவில் இருந்து குறைந்தபட்சமாக 119 கிலோமீட்டர், அதிகபட்சமாக 127 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து சுற்றுப்பாதையில் சந்திராயன்2 சுற்றி வருகிறது.

இந்நிலையில், சந்திராயன்-2 விண்கலத்திலிருந்து, ஆய்வூர்தி பிரக்யானுடன் கூடிய லேண்டர் விக்ரம் இன்று மதியம் 1.10 மணிக்கு திட்டமிட்டபடி பிரிந்தது. இதன் மூலம் சந்திராயன்-2 வெற்றிப் பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது.

இனி லேண்டர் விக்ரம் படிப்படியாக நிலவை நோக்கி இறங்கி, வரும் 7ஆம் தேதி அதிகாலை 1.30 மணியிலிருந்து 2 மணிக்குள்  நிலவில் தரையிறங்கும். லேண்டர் நிலவில் தரையிறங்கிய பின்னர், அதிலிருந்து பிரக்யான் ஆய்வூர்தி வெளியேறி நிலவின் தரையில் ஆய்வு மேற்கொள்ளும்.