இந்தியா மற்றவை

சந்திராயன்-2 விண்கலம் ஜூலை 15 ஆம் தேதி ஏவப்படும் – இஸ்ரோ தலைவர் சிவன்…

சந்திரனை ஆராய்வதற்கான சந்திராயன் -2 விண்கலம் ஜுலை 15 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் அதிகாலை 2 மணி 51 நிமிடங்களுக்கு சந்திராயன் 2  அனுப்பப்பட இருப்பதாக கூறினார்.

செப்டம்பர் 6 அல்லது 7 ஆம் தேதி விண்கலத்தில் அனுப்பி வைக்கப்படும் ஆய்வு ஊர்தி நிலவில் தரையிறங்கி ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டார்.

சந்திராயன் 2 அமைப்பின் எடை சுமார் 3800 கிலோ என்று கூறிய இஸ்ரோ தலைவர் சிவன், மொத்தம் 603 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக தெரிவித்தார்.