தற்போதைய செய்திகள்

சாதனை திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிப்பீர் – வாக்காளர் பெருமக்களுக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் வேண்டுகோள்…

தருமபுரி:-

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி கழக கூட்டணியின் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாசை ஆதரித்தும், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி கழக வேட்பாளர்கள் வே.சம்பத்குமார், ஏ.கோவிந்தசாமி ஆகியோருக்கு ஆதரவாகவும் இரட்டைஇலை சின்னத்தில் வாக்களிக்க கேட்டு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மொரப்பூர் ஒன்றியத்தில் உள்ள மணியம்பாடி‘, ஓசஹள்ளி, ராணிமூக்கனூர், லிங்கநாய்க்கனஹள்ளி, வெங்கடதாரஹள்ளி, புட்டிரெட்டிப்பட்டி, மோட்டாங்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில் உள்ள 44 கிராமங்களிலும், அரூர் சட்டமன்றத்தொகுதியில் மோப்பிரிப்பட்டி, வடுகப்பட்டி அக்ரஹாரம், சந்தப்பட்டி, கொளகம்பட்டி ஆகிய ஊராட்சிக்குட்பட்ட 54 கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.வாக்கு சேகரிப்பின் போது ஆங்காங்கே பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

அப்போது அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

வாழ்வில் வளம்பெற விலையில்லா கறவை பசுமாடுகள் , விலையில்லா ஆடுகள், கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்று கழக அரசு பல்வேறு சாதனை திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான இந்த அரசு மேலும் பல மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றிட கழக கூட்டணி வேட்பாளர்களை மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் உயர்கல்வித்துறை மூலம் பல்வேறு அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏழை எளிய மாணவ-மாணவிகள் தரமான கல்வியை பெற்று வருகிறார்கள்.

இதுபோன்ற சாதனை திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திட கழக கூட்டணி வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். பல துறைகளிலும் கழக அரசு சாதனைகள் படைத்து வருகிறது. சாதனைகள் தொடர கழக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்திலும், கூட்டணி வேட்பாளருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

இந்த வாக்குசேகரிப்பின் போது மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை தலைவர் ஆர்.ஆர்.பசுபதி, மாவட்ட துணை செயலாளர் செண்பகம் சந்தோஷ், மொரப்பூர் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் மதிவாணன், நல்லம்பள்ளி ஒன்றிய கழக செயலாளர் சிவப்பிரகாசம், இராணிமூக்கனூர் செல்வராஜ், ஒடசல்பட்டி சக்திவேல், சரவணன், மாவட்ட மருத்துவர் அணி இணை செயலாளர் டாக்டர் சரவணன், ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் சிவன், முன்னாள் ஒன்றிய கழக செயலாளர்கள் எம்.ஆர்.புள்ளியப்பன், தியாகி சுப்ரமணிய சிவா, கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் விஸ்வநாதன், அரூர் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி சாமிக்கண்ணு, பா.ம.க. மாநில துணைத்தலைவர் அரசாங்கம், மாநில நிர்வாகி அய்யப்பன், ஒன்றிய செயலாளர்கள் சேகர், செந்தில், பா.ஜ.க மாவட்ட செயலாளர் கிருத்திகா, தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் விஜயகாந்த், த.மா.கா. வட்டார தலைவர் சிவா அரவிந்தன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.