இந்தியா மற்றவை

சாதிக்பாட்சா மரணம் பற்றிய மர்மம் மறு விசாரணை செய்தால் வெளிப்படும் – குடியரசுத்தலைவரிடம், ரேஹாபானு பரபரப்பு புகார்

புது­டெல்லி:-

முன்­னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா­வின் நெருங்­கிய உதவியா­ளராக இருந்த சாதிக்­பாட்சா 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்­கில் சிபிஐ விசாரணை வளை­யத்துக்­குள் கொண்டு வரப்­பட்ட போது, அவர் மர்­ம­மான முறையில் மர­ண­ம­டைந்­தார். தனது கண­வரின் சாவில் மர்­மம் இருப்­பதாக அவரது மனைவி எஸ்.ரேஹா­பானு கூறியுள்­ளார்.

இதுதொடர்­பாக டெல்லி சென்று குடியரசு தலைவர் ராம்­நாத் கோவிந்தை நேரில் சந்தித்­தார். தனது கண­வரின் மர­ணம் குறித்து மறுவிசா­ரணை நடத்­தப்பட வேண்டும் என்று குடியரசுத்தலைவரிடம் புகார் மனு கொடுத்­தார்.

தி.மு.க. முன்­னாள் மத்­தியஅமைச்சர் ஆ.ராசா. இவர் மத்தியஅமைச்சராக இருந்த போது 2ஜி ஸ்பெக்ட்­ரம் ஒதுக்­கீட்­டில் முறை­­­கேடு நடந்­த­தாக புகார் தெரிவிக்­கப்­பட்டது. இதன் அடிப்­ப­டையில் ஆர்.ராசா மீது வழக்கு தொட­ரப்­பட்­டது. இந்த வழக்கு பின்­னர் சிபிஐக்கு மாற்­றப்­பட்­டது. சிபிஐ அதிகா­ரிகள் ஆர்.ராசாவின் வீடுகளிலும், அவரு­டன் தொடர்பு­டை­யவர்­களின் வீடுகளிலும் சோதனை நடத்தி­னர். ஆர்.ராசா­வுக்கு மிகவும் நெருங்கிய நண்­ப­ராக இருந்­த­வர் சாதிக்­பாட்சா. 2ஜி ஸ்பெக்ட்­ரம் வழக்கில் சிபிஐ விசா­­­ரணை வளை­யத்திற்­குள் கொண்டு வரப்­பட்ட சாதிக்பாட்சா மர்­ம­மான முறையில் மர­ண­ம­டைந்­தார்.

விசா­ரணைக்கு பயந்து அவர் தற்­கொலை செய்து கொண்டிருக்­கலாம் என்று கருதப்­பட்டது. ஆனால் அவரது மனைவி ரேஹா­பானு மறுத்­தார். தனது கண­வர் சாதிக்­பாட்சா மர­ணத்தில் மர்­மம் நிறைந்திருப்­ப­தாக கூறி­னார். சாதிக்­பாட்சா மர­ண­மடைந்த போது தமிழகத்­தில் ஆட்­சிப் பொறுப்­பில் இருந்த கட்­சியின் நிர்­வா­கி­கள் சிலர் மற்­றும் காவல்­துறை அதிகா­ரிகள் எங்­கள் வீட்­டிற்கு வந்­த­னர். என்னைவெளியே அனுப்பிவிட்டு எனது கண­வரி­டம் பேசி விட்டு சென்று விட்­ட­னர். இதற்கு பிறகு தான் எனது கண­வர் மர்­மமான முறையில் மர­ண­மடைந்­தார் என்று சாதிக் பாட்­சா­வின் மனைவி இன்­­­­ற­ளவும் கூறி வருகி­றார்.

இந்த நிலையில் சாதிக்பாட்­சா­வின் மனைவி ரேஹா­பானு டெல்லி சென்­றார். நேற்றுமுன்தினம் குடியரசுத்தலைவர் மாளி­கைக்கு சென்ற அவர் குடியரசுத்தலைவர் ராம்­நாத் கோவிந்தை நேரில் சந்தித்­தார். அவரி­டம் புகார் மனு ஒன்றை அளித்­தார். தனது கண­வர் சாதிக்­பாட்சா மர்ம சாவு குறித்து மறு விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என்று குடியரசுத்தலைவரிடம் கோரி­னார். குடியரசுத்தலைவரிடம் கொடுத்த புகார் மனுவில் ரேஹா பானு கூறியிருப்­ப­தா­வது:–

ஒவ்­வொரு வரு­ட­மும் எனது கண­வரின் நினைவுநாளை நான் அனுசரித்து வருகி­றேன். என் கண­வர் மறைந்த நாளில் அவரது நினை­வாக பத்திரி­கை­களில் இரங்­கல் தெரிவித்து விளம்­ப­ரம் தரு­வேன். இந்த ஆண்டும் பத்திரி­கையில் விளம்­ப­ரம் கொடுத்­தேன். கூடா நட்பு கேடாய் விளை­யும் என்ற வாசகம் பொறிக்­கப்­பட்ட விளம்­பரத்தை ஆண்டு­தோ­றும் கொடுப்­பேன். இந்த ஆண்­டும் இதே வாசகத்து­டன் விளம்­ப­ரம் கொடுத்­தேன். விளம்­ப­ரம் கொடுத்த மூன்று நாட்­க­ளில் எனது கார் மீது கற்­கள் வீசப்­பட்­டன. ஆயுதங்­களால் கார் தாக்­கப்­பட்­டது. எனது சகோ­தரரு­டன் நான் காரில் பய­ணம் செய்து கொண்டிருந்த போது இந்த சம்­ப­வம் நடந்­தது. எனது சகோ­தரர் காரை நிறுத்­தா­மல் வேகமாக சென்­ற­தால் நாங்­கள் உயிர் தப்­பி­னோம். இன்­ற­ளவும் என்­னு­டைய உயிருக்கு ஆபத்து நீடிக்­கி­றது. எனது கண­வரின் மர­ணத்திற்கு வெளியில் இருக்­கும் சிலர் தான் கார­ணம்.

ஆகவே எனது கண­வரின் மர்மசாவு தொடர்­பான வழக்கை மீண்டும் சம்­பந்­தப்பட்ட அதிகா­ரிகள் விசா­ரிக்க வேண்டும். எனது கண­வர் உயிருடன் இருந்த போது அவரி­டம் விசா­ரணை நடத்­தப்­பட் டது. அப்­போது எனது கண­வர் விசா­ரணை அதி­ கா­ரிகளி­டம் வாக்­குமூ­லம் அளித்­தார். அவர் அப்­படி என்ன சொன்­னார் என்­பது குறித்து மறுவிசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என்று கேட்­டுக்­கொள்கி­றேன். மு.க.ஸ்டாலின், ஆ.ராசா உட்­பட சில­ரி­டம் எனது கண­வர் அப்­போது பேசியிருக்­கி­றார்.

ஆகவே இதுகுறித்தும் மறுவிசாரணை நடத்­தப்­பட வேண்­டும். 2ஜி ஸ்பெக்ட்­ரம் ஊழலில் குற்­றம் சாட்­டப்பட்­டுள்ள சாகித்பால்­வாவை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசி­னார் என்று விசா­ர­ணையின் போது எனது கண­வர் விசா­ரணை அதி­கா­ரிகளி­டம் தெரிவித்து இருக்­கிறார். இதற்கு பிறகு என் கண­வருக்கு மிரட்­டல்­ கள் வரத் தொடங்கின. அவருக்கு மிரட்­டல்­கள் விடுக்­கப்­பட்­டன. இந்த விசா­ரணையின் போது தான் 2011 மார்ச் 11–ம்தேதி எனது கண­வர் மர்­ம மான முறையில் மர­ண­மடைந்­தார். எனது கண­வர் மன­வலிமை மிக்­க­வர். ஆகவே அவர் தற்கொலை செய்து கொண்­டார் என்று நான் ஒரு போதும் நம்­ப மாட்­டேன். எனது கண­வர் மர்ம சாவு குறித்து மறு விசா­ரணை நடத்தி­னால் உண்­மை­கள் வெளிவரும். இவ்­வாறு குடியரசுத்தலைவருக்கு அளித்த புகார் மனு­ வில் ரேஹா­பானு தெரி­ வித்திருக்­கி­றார்.