அரியலூர்

சிதம்பரம் கழக வேட்பாளருக்கு அரசு கொறடா வாக்குசேகரிப்பு…

அரியலூர்:-

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் பி.சந்திரசேகரை ஆதரித்து, வேப்பூர் வட்டாரத்தில் அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் பி.சந்திரசேகரை ஆதரித்து பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் வட்டாரத்தில் அரசின் தலைமை கொறடாவும், அரியலூர் மாவட்டக் கழக செயலாளருமான தாமரை எஸ்.ராஜேந்திரன், சித்தளி கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள, இரட்டைஇலை சின்னத்தில் வாக்களித்து, வேட்பாளர் பி.சந்திரசேகரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து வேப்பூர் வட்டாரத்துக்குட்பட்ட எழுமூர், கீழப்புலியூர், கே.புதூர், நமையூர், பென்னாகரம், முருக்கன்குடி, பெருமத்தூர், பெண்ணகோணம், கீழக்குடிக்காடு, சு.ஆடுதுறை, ஒகளூர், வடக்கலூர், கிழுமத்தூர், அத்தியூர், அகரம் சீகூர், வசிஸ்டபுரம், மேலக்காளிங்கராய நல்லூர், பள்ளக்காளிங்கராய நல்லூர், வேள்விமங்கலம், கீழப்பெரம்பலூர், வயலூர், வயலப்பாடி, கோவிந்தராஜபட்டினம், ஒலைப்பாடி, கல்லை, வேப்பூர், பரவாய், புதுவேட்டக்குடி, காடூர், தேனூர், கோவில்பாளையம், துங்கபுரம் உள்பட, பல்வேறு பகுதிகளிலும் வேட்பாளர் பி.சந்திரசேகர் வாக்குசேகரித்தார்.

வேட்பாளர் பி.சந்திரசேகருடன், நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வரகூர் அருணாச்சலம், நாடாளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி, பா.ம.க. மாவட்ட செயலாளர் செந்தில்குமார், பா.ஜ.க மாவட்ட தலைவர் சாமி இளங்கோவன், தே.மு.தி.க., மாவட்டச் செயலாளர் துரை.காமராஜ், த.மா.கா மாவட்ட செயலாளர் ஜனாகிருஷ்ணன், புதிய தமிழகம் மாவட்ட செயலாளர் தேவேந்திரபாலாஜி, த.ம.மு.க. மாவட்ட செயலாளர் குணா பாண்டியன், புரட்சி பாரதம் மாவட்ட செயலாளர் வெள்ளையன், வேப்பூர் ஒன்றிய செயலாளர் ப.கிருஷ்ணசாமி மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.