தற்போதைய செய்திகள்

சின்னபுத்தூர் மாரியம்மன் கோயில் திருவிழா – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பங்கேற்பு…

திருவண்ணாமலை:-

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சின்னபுத்தூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் ஆலயகூழ்வார்க்கும் திருவிழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பங்கேற்றார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சின்னபுத்தூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீமாரியம்மன் ஆலயம் உள்ளது. இது சக்தி வாய்ந்த ஆலயமாகும், இவ்வாலயத்தில் பல ஆண்டுகளாக வெகு சிறப்பாக கூழ்வார்க்கும் விழா நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு கூழ் வார்க்கும் திருவிழா நேற்று காலை நடைபெற்றது. இவ்விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் க.சங்கர், வேலூர் பால் கூட்டுறவுசங்க துணைத்தலைவர் பாரி பி.பாபு, நகர ஒன்றிய செயலாளர்கள் பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு, எ.அசோக்குமார், பாசறை மாவட்ட செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ப.திருமால், கண்ணமங்கலம் நகர செயலாளர் பாண்டியன், இளைஞரணி குமரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அலகு குத்தி பக்தர்கள் தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பூங்கரம் எடுத்து வந்தும், உடல் முழுவதும் எலுமிச்சைபழம் குத்திக்கொண்டும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு ஸ்ரீமாரியம்மன் புஷ்ப பல்லக்கில் ஊர்வலம் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகள், நாடகம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.