இந்தியா மற்றவை

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு: 499 மதிப்பெண்களோடு 2 மாணவிகள் முதலிடம்…

சிபிஎஸ்இ +2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியாகின. இதில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹன்சிகா சுக்லா, கரிஷ்மா அரோரா ஆகிய இருவரும் 499 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

ரிஷிகேஷை சேர்ந்த கெளராங்கி சாவ்லா, ரேபேரேலியை சேர்ந்த ஐஷ்வர்யா, ஹரியானாவைச் சேர்ந்த பவ்யா ஆகிய 3 மாணவிகளும் 498 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.18 பேர் 497 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர். இதில் 11 பேர் மாணவிகள்.

மாணவர்களைவிட மாணவிகள் அதிகம்

இதில் 88.70% தேர்ச்சி விகிதத்தோடு மாணவிகள் முன்னிலை வகிக்கின்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 79.40% ஆக உள்ளது.மேலும் மத்திய அரசால் இயக்கப்படும் கேந்திரியா வித்யாலயா பள்ளி 98.54% தேர்ச்சியும், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி 96.62% தேர்ச்சியும் பெற்றுள்ளது.

2-வது இடத்தில் சென்னை

தேர்ச்சி விகிதத்தில் 98.2 சதவீதத்தோடு திருவனந்தபுரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சென்னை இரண்டாவது இடத்திலும் (92.93%), டெல்லி மூன்றாவது இடத்திலும் (91.87%) உள்ளன.சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், cbse.nic.in, cbseresults.nic.in என்ற இணையதளங்களில் வெளியாகியுள்ளன.