தேனி

சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை…

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு 4வது நாளாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சுருளி அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.

இதனால் சுருளி அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் திரும்பினர்.   நீர்வரத்து குறைந்த பின்னரே அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.