ராமநாதபுரம்

சூரிய கிரகணத்தை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் நடைதிறப்பு நேரம் மாற்றம்

ராமேசுவரம்:-

நாளை (26-ந் தேதி) காலை 8 மணியில் இருந்து 11.20 மணிக்கு வரையிலும் முழு சூரிய கிரகணம் நடைபெறுகிறது.

இதையொட்டி நாளை ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் நடையானது அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 மணி முதல் 4.30மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும். பின்னர் காலை 7 மணிக்கு நடை சாத்தப்படும்.

தொடர்ந்து காலை 9.35 மணிக்கு அக்னிதீர்த்த கடற்கரையில் தீர்த்தவாரி பூஜை நடைபெற்று, மதியம் 12 மணியளவில் கோவில் திறந்து கிரகண அபிஷேக நடந்து வழக்கமான பூஜைகள் நடக்கும்.

எனவே நாளை காலை 7 மணியில் இருந்து மதியம் 12 மணி வரையிலும் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்யவோ, புனித கிணறுகளில் நீராடவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். 12 மணிக்கு பிறகு பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.