தற்போதைய செய்திகள்

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாடார் மகாஜன சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் பாண்டியராஜன் ஆலோசனை…

கோவை:-

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக நாடார் மகாஜன சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் க.பாண்டியராஜன் ஆலோசனைசூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கணியூர் ஊராட்சி ஊஞ்சம்பாளையம் பகுதியில் சோமனூர் வட்டார நாடார் மகாஜன சங்க நிர்வாகிகளுடன் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் க.பாண்டியராஜன் பேசியதாவது:-

கழக அரசு சாதி, சமய வேறுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.உங்களுக்கு என்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் கழக அரசு துணை நிற்கும். கடந்த காலங்களில் பனை நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கழக அரசு துணை நிற்கிறது. மேலும் அனைத்து சமுதாய மக்களும் மென்மேலும் உயரவும் கழக அரசு செயல்பட்டு வருகிறது. உங்களின் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

வருகின்ற சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து மத்திய மாநில அரசுகளின் மக்கள் நலத்திட்டங்கள் இத்தொகுதியில் நிறைவேறவும் விடுபட்ட பணிகள் நடைபெறவும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அமைச்சர் க.பாண்டியராஜன் பேசினார்.

கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பி.பலராமன், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, எமரால்டு இளங்கோ, ஈஸ்வரன், வெள்ளிங்கிரி, கிருஷ்ணமூர்த்தி, ராசு, சுப்பிரமணி கழக நிர்வாகிகள் சக்திவேல், கந்தசாமி, செல்வராஜ், முத்து துரை, காமராஜ் மற்றும் சோமனூர் வட்டார நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.