தமிழகம்

 சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ரூ.29 ஆயிரத்தைத் தாண்டியது…

சென்னை:-

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 29 ஆயிரம் ரூபாயைக் கடந்து விற்பனையாகிறது.

இன்று ஒரே நாளில் சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.192 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.29,016க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராமுக்கு ரூ.24 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.3,627க்கு விற்பனையாகிறது.

ஆகஸ்ட 4ம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.27,328க்கு விற்பனையான நிலையில், இன்று ஆகஸ்ட் 13ம் தேதி இது ரூ.29 ஆயிரத்தை தாண்டியுள்ளது.