தமிழகம்

சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்…

சென்னை :-

சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.11 காசுகளூம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.20 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டு, எந்த மாற்றமும் இல்லாமல் இன்று காலை முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எண்ணெய் நிறுவனங்கள் முன்பு பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு இந்த நடைமுறை கடந்த 2017 ஜூன் மாதம் முதல் கைவிடப்பட்டது.

இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையிலும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது.