தமிழகம்

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த நிலையில், இடையில் சில தினங்கள் குறையத் தொடங்கியது. தற்போதைய சூழலில் சில தினங்களில் குறைந்தும், அதிகரித்தும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் விலை 14 காசுகளும், டீசல் விலை 16 காசுகளும் அதிகரித்து விற்பனையாகிறது. சென்னையில் சனிக்கிழமை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 74.41 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ. 70.72 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.