தமிழகம்

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…

சென்னை:-

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகளும், டீசல் லிட்டருக்கு 13 காசுகள் குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இடையில் சில தினங்கள் குறையத் தொடங்கியது. சில தினங்களாக குறைந்தும், அதிகரித்தும் மாற்றமின்றியும் விற்பனையாகி வந்தது.

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில், பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் ஒரு லிட்டர் 26 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.73.88 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் 13 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.69.61 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.