சிறப்பு செய்திகள்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் – அரசாணை வெளியிட்டது தமிழக அரசு…

சென்னை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பெயரை வைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதற்கான அரசாணையை தமிழக அரசு  வெளியிட்டது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் எம்ஜி.ஆர். பெயர் சூட்ட வேண்டும், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவி அம்மா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பிரதமரை நேரில் சந்திக்கும் போதெல்லாம் வலியுறுத்தி வந்தார். சட்டப்பேரவையிலும் இதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சமீபத்தில் சென்னையில் நடந்த தேர்தல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு பிரதமர் வந்தபோது இதுபற்றிய மனுவை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பிரதமரிடம் நேரில் கொடுத்தார். அக்கூட்டத்தில் பின்னர் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக மத்திய அரசு அதற்கான ஒப்புதழை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு  அரசாணை ஒன்றை ெவளியிட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் வைக்க மத்திய அரசு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இனிமேல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையம் என்று அழைக்கப்படும்.

இவ்வாறு அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.