தற்போதைய செய்திகள்

செய்யாறு அரசு மருத்துவமனையில் ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.1 லட்சம் – தூசி கே.மோகன் எம்.எல்.ஏ வழங்கினார்…

திருவண்ணாமலை:-

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள அரசு மருத்துவமனையில் குடிதண்ணீருக்காக ஆழ்துளை கிணறு அமைக்க ரூ. 1 லட்சம் நிதியை சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன் வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள தலைமை மருத்துவமனையில் குடிநீர் வசதி போதுமானதாக இல்லை என்று அரசு மருத்துவர் பாலகிருஷ்ணன் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகனிடம் தகவல் கூறினார். மேலும் மருத்துவமனையில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வற்றி விட்டதாகவும், மற்றொரு ஆழ்துளை கிணற்றில் மோட்டார் விழுந்து விட்டதாகவும் கூறினார்.

பின்னர் சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் குடிதண்ணீருக்காக உடனடியாக தனது சொந்த பணத்தில் ரூ. 1 லட்சத்தை அரசு மருத்துவரிடம் வழங்கி ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் பிரச்சனை தீர்க்க ஏற்பாடு செய்தார்.மேலும் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை சந்தித்து மருத்துவ வசதி குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ செய்யாறில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் ஜமாபந்தி அலுவலராக இருந்த மாவட்ட ஆட்சிதலைவர் க.சு.கந்தசாமியை சந்தித்து தலைமை மருத்துவமனையில் தண்ணீர் பிரச்சனை இருப்பது குறித்து எடுத்து கூறினார். மேலும் தண்ணீர் பிரச்சனையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

மாவட்ட ஆட்சியரும் மாவட்ட நிர்வாகம் மூலம் குடிதண்ணீர் பிரச்சனையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். அப்போது உடன் கழக நிர்வாகிகள் டி.பி.துரை, எம்.மகேந்திரன், எஸ்.கிருஷ்ணன், எம்.அரங்கநாதன், ஏ.ஜனார்த்தனன், கே.வெங்கடேசன், ஏ.அருணகிரி, எஸ்.ரவிச்சந்திரன், லோகநாதன், எஸ்.திருமூலன், ராஜ்கணேஷ் ரமேஷ், ஜி.கோபால், பாஸ்கர் ரெட்டியார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.