சேலம்

சேலத்தில் கழக வேட்பாளர் சரவணன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு..

சேலம்:-

சேலத்தில் கழக வேட்பாளர் சரவணன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

சேலம் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன் நேற்று 2-வது நாளாக மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் வீதி, வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 46 வது கோட்டத்தில் உள்ள குகை காளியம்மன், மாரியம்மன் கோயிலில் காலை 9 மணிக்கு சாமி கும்பிட்டு விட்டு அவர் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். பின்னர் வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து கழக அரசின் சாதனை திட்டங்களை சொல்லி வாக்கு சேகரித்தார்.

அதைத் தொடர்ந்து 45, 46, 47, 48, 49, 50 உள்ளிட்ட வார்டுகளில் காலை முதல் இரவு வரை வீதி, வீதியாக சென்று வாக்குகள் சேகரித்தார். அவருக்கு ஆதரவாக சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் சேலம் எம்.பி. வி.பன்னீர்செல்வம், சேலம் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மாணவரணி செயலாளருமான ஏ.பி.சக்திவேல், பாமக. மாநில துணைத்தலைவர் மு.கார்த்தி, பாமக மாநில துணை செயலாளர் இரா.அருள், மாநகர செயலாளர் கதிர் ராசரத்தினம், தேமுதிக மாநகர செயலாளர் ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா கட்சி நகர செயலாளர் கோபிநாத் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தனர்.

இதில் கழகம் சார்பில் மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.கே.செல்வராஜ், முன்னாள் துணை மேயர் நடேசன், பகுதி செயலாளர்கள் தியாகராஜன், யாதவமூர்த்தி, சண்முகம், கட்சியின் பொருளாளர் பங்க் வெங்கடாஜலம் அம்மா பேரவை செயலாளர் சரவணமணி, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நெத்திமேடு முத்து, மகளிரணி செயலாளர் ஜமுனா ராணி, மாநகர இணை செயலாளர் பாமா கண்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் கீதா, எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பாசறை செயலாளர் டாக்டர் சதீஷ்குமார் வட்ட கழக செயலாளர் பாலசுப்பிரமணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.